வணக்கம் சிகரம்!

பதிவர் : சிகரம் on 2017-07-18 00:25:52

வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். "சிகரம்" இணையத்தளம் ஜூலை முதலாம் திகதி முதல் தமிழ்ப்பணியாற்றிவருவது நாம் அறிந்ததே. தமிழ் கூறும் நல்லுலகின் பங்களிப்போடு வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் என் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் "சிகரம்" இணையத்தளத்தை வெற்றிபெறச் செய்ய பங்களிக்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

எமது மகுட வாசகம்:
தமிழ் கூறும் நல்லுலகு!

எமது தூரநோக்கு:
தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!

உங்கள் திறமைகளை எங்கள் சிகரத்தோடு இணைந்து இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்துவோம்! அறிவியல், அரசியல், இலக்கியம், நக்கல் மற்றும் விளையாட்டு என எது சார்ந்த படைப்பாக இருந்தாலும் அவை அனைத்துக்கும் களம் அமைத்துத் தர நாம் தயாராக இருக்கிறோம். தரமான டப்ஸ்மாஷ் அல்லது சிறந்த குரல் பதிவு என்பவற்றையும் உலகறியச் செய்ய நாம் தயாராக உள்ளோம். உங்கள் சுயசரிதை, விமர்சனங்கள் ஆகியனவும் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே. உங்கள் படைப்பு எதுவாக இருந்தாலும் அழகிய தமிழில் அமைந்திருக்க வேண்டும். இதைத்தவிர உங்களுக்கு வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. 

தமிழ் வளர்க்கும் உயரிய நோக்கத்தை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கிடுவீர்கள் என நம்புகிறேன்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!

சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co

தொடர்புகளுக்கு : editor@sigaram.co

குறிச்சொற்கள்: #தமிழ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account