சிகரம்

சிகரம் டுவிட்டர் - 01

பதிவர் : சிகரம் on 2018-03-22 01:12:03

#தூளியிலிட்டுப்பாடி ஆட்டினால் குழந்தை தூங்கிவிடும் என்பது... ‘உத்தர’வாதம்! 

- N K Kannan @NKKannan1


#தனிமனிதனால் எதையும் சாதித்து விட முடியாது என்ற எண்ணம் காலங்காலமாக நம்மிடம் உள்ளது, ஆனால் இது முழுப் பொய். இன்று எல்லா சாதனைகளும் வளர்ச்சிகளும் ஏதோ ஒரு தனி மனிதனின் ஆசையும் போராட்டமும் தான்.

#முயன்றால்முடியும். 

- கௌரிசங்கர் @gowrisa28263028


#குறைகளை சுட்டி காட்டும் போது

வார்த்தைகள் சுடுவதில்லை.

ஆனால் குத்தி காட்டும்போதுதான்

மனமே காயங்களால் நிலை குலைந்து போய்விடுகிறது. 

- தேவதை - @SaranyaTwtzz


#கூகுளில் தேடுவதை விட சிரமமானது,

கூட்டத்தில் விட்ட நம் செருப்பை தேடுவது.! - சப்பாணி - @manipmp


#எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக்கொள்ள முடியாது.! - முகிலன் - @MJ_twets


 #"இது உங்களுக்கு புரியாது" என பேரகுழந்தைகள் தாத்தா/பாட்டியிடம் கூறுவதில் வளர்ந்திருக்கிறது அறிவியல்..!

#அறிவியல் #கால_மாற்றம் 

- பிளாக் லைட் - @BlackLightOfl


#வரதட்சணை வேண்டாமென்று கூறி பெண் பார்க்கச் சொல்லும் ஆண்கள் பலர் வந்துவிட்டனர். 👏

ஆனால், பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து வைக்க பெண் வீட்டார்கள் தயாராக இல்லை.. 😌😌 

- சக்திமான் - @mufthimohamed1


#நீ சுத்த ஏமாளி.

உன்னை அழகுபடுத்திக்கொள்ள

நீ விலை கொடுத்து வாங்கிய

எல்லாப் பொருட்களுமே

உன்னைக்கொண்டு

தங்களை

அழகுபடுத்திக்கொள்கின்றன!

#என்னவளே

- துணிந்தவன் - @cNatarajan4


#குறுக்கு வழிகள் அனைத்தையும் முயற்சி செய்து அதில் தோற்றபின் கடைசியில் நேர்மையான வழிக்கு வருவதே பலருக்கு வாடிக்கையாகிவிட்டது...

#உண்மை  

- ஆக்டோபஸ் - @ChutiyaN_TwittZ


#பெண்ணே!

நான்

பார்க்கும் போதெல்லாம்...

நீ...!

"கேள்விக் குறி"யாக

நிற்கும் வரை...

என் வாழ்க்கை

"ஆச்சிரியக் குறி"யாக

மாறப் போவதில்லை.... 

- கவிதைரசிகன் கவிதைகள் - @kavithairasiga 

 

#079/2018
சிகரம் டுவிட்டர் - 01
பதிவு : சிகரம்
#சிகரம் #டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER #சிகரம்  குறிச்சொற்கள்: #சிகரம் #டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account