சிகரம்

தைமகளே வா! வா!!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-01-14 00:50:07

ஆவாரை, பூலைப்பூவோடு,

பாளையும், வேம்போடு காப்புக்கட்டி,

வீடுவாசல் அலங்கரித்து பழமையினை

அழித்தொழிக்கும் போகியாம்!


தைமகளே வா! வா!! தமிழனின் துயர்துடைத்திட

நீ வா! கலைமகளும்,

அலைமகளும் அணிந்திருக்க மண்மகளே வா! வா!!

விண்தொடு விந்தைகளை புரிந்திடவே நீ வா!
காலையிலே நீராடி,

சதிர்குழலில் பூச்சூடி

பானையிலே பொங்கலிட்டு,

பாவையர்கள் குலவையிட்டு

ஆழியிலே நீராடி ஆதவனும் கதிர்விரிக்க!


வாழையிலைப் படையலிட்டு,வாழ்த்தொழியில் கோசமிடும்

வேளையிலே கைகூப்பி வணங்கிடுவோம் ஆதவனை!

மூன்றாம் திருநாளாம் முக்கண்ணன் அவதாரம்!


உழவனுக்கு வாழ்த்துச்சொல்லி ஆநிரையை நீராட்டி

அழகாக அலங்கரித்து,

மாலையிலே பொங்கலிட்டு வேப்பிலையில்

வாய்துடைத்து பொங்கலூட்டிக் குலவையிடும்

பொன்னான திருநாளாம்!


நான்காம் நாளாம் காளையெல்லாம் நானிலத்தில்

சிறக்கும் வண்ணம் மாலையிட்டு அலங்கரித்து,

மஞ்சுவிரட்டு விளையாடும் காளையொடு

காளையர்கள் சதிராடும் திருநாளாம்!


உழவினைக் காத்திடுவோம்,

உழவனை உயர்த்திடுவோம்!

பொங்கிவா தைமகளே!

புரவலரும் உன் நிழலே!


-கவின்மொழிவர்மன்.

 

தைமகளே வா வா - சிகரம் 

  

குறிச்சொற்கள்: #தைப்பொங்கல்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Kalaivani

2018-01-14 02:38:47

சிகரம் உண்மையாகவே சிகரம்தான்.தங்களது இணையம் வளர்ச்சியின் உயரத்திற்கு தங்களை கண்டிப்பாக அழைத்து செல்லும்.உண்மையான உழைப்பு வெற்றிக்கு மட்டுமே வழிகாட்டும் தாங்கள் வளர்வது மட்டுமன்றி மற்றவரையும் உயர்த்த நினைக்கும் கரங்கள் என்றும் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.வளரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள். சகோதரரரே.

Create AccountLog In Your Account