சிகரம்

என்றேனும் ஒரு நாள்...

பதிவர் : அம்பாளடியாள் on 2017-11-19 10:34:24

என்றேனும் ஒரு நாள் வரும்
இந்த உலகத்தில் திருநாள் வரும்!
அந்நாளில் நான்பாடும் பாடல் கேட்கும்
அழியாத இசையென்னும் தேனை வார்க்கும்!

தமிழே நீ என்னைத் தாலாட்டு
தாய் மடிபோல இனிக்காதே பாராட்டு!
விழி கொஞ்சும் வார்த்தைகள் நீதானே!
விடியாமல் போகுமா செந்தேனே?உறவின்றி அழுகின்ற பறவை-இவள்
உயிர்வாழத் தந்தாயே உறவை!
ஊர்மெச்ச உன் பேரைச் சொல்வேனே!
உலகெங்கும் உனையள்ளிச் செல்வேனே!

மார்மீதும் தோள்மீதும் தாலாட்டினாய்!
மணம் வீசும் வார்த்தையால் சீராட்டினாய்!
சேய் என்றன் நினைவுக்குள் நீதானே!
சிறு பிழையேனும் வருமா என்தாயே?

நாடோடிப் பாட்டுக்காரி -உன்னை
நாள்தோறும் போற்றும் சூரி!
கரிகாலன் கதை சொல்ல வந்தேனே
கதையோடு கதையாக நின்றேனே!

இனி என்றன் பாடல் நில்லாது!
இளநெஞ்சின் ஆசை விட்டுச் செல்லாது!
ஒளி வீசும் நிலவே நீ வரவேண்டும்
ஒரு கோடி ஆனந்தம் தர வேண்டும்!

பாடல் வரிகள் : அம்பாளடியாள் | நன்றி |இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம் 

என்றேனும் ஒரு நாள் | அம்பாளடியாள் | பேஸ்புக்

குறிச்சொற்கள்: #அம்பாளடியாள் #கவிதை #பேஸ்புக்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Seeralan vee

2017-11-19 13:57:22

அழகிய சொல்லாடல் வாழ்த்துகள் சகோ

Create AccountLog In Your Account