பிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்!

பதிவர் : சிகரம் on 2017-08-20 02:48:16

தமிழகத்தின்  வம்புக் குரலுக்கான தேடல் என்று பிரபலமாக வர்ணிக்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் நிகழ்ச்சி குறித்த விமர்சனப் பார்வையை இங்கு முன்வைக்க உள்ளோம். கடந்த வாரம் வார இறுதியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான  கமல் அவர்கள் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக இனி புதுவரவுகள் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் என்றும் மக்கள் மனம் விரும்பும் போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு உள்ளே வரலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்⁠⁠⁠⁠.

கமலின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. என்ன காரணம் அது? சில நாட்களுக்கு முன் அதிகமான மன அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து தானாக வெளியேறியிருந்த நடிகை ஓவியா மீண்டும் நிகழ்ச்சிக்கு உள்ளே திரும்பி வருவார் என்று அவரது தீவிர ரசிகர்கள் எதிர்பார்த்திருந்ததே காரணமாகும். ஆனால் தற்போது ஒளிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை ஓவியா நான் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் திரும்பி வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையை. உண்டாக்கியிருந்தாலும் கமல் கூறிய மக்கள் மனம் விரும்பும் போட்டியாளர் என்ற கூற்றில் ஓவியாவைத் தான் குறிப்பிட்டிருப்பார்  என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனாலும் பிக்பாஸ் மக்கள் சற்றும் எதிர்பாராத விதமாக மூன்று புது வரவுகளை களமிறக்கியுள்ளார்.                        ஓவியா வெளியேறியதில் இருந்து நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறையத் தொடங்கியுள்ளது. ஆகவே புதுவரவுகளின் மூலம் நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்த வேண்டும் என பிக்பாஸ் எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். 

ஓவியா ஒரு நடிகையாக இதுவரை இருபத்தைந்து படங்கள் அளவில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியே அவருக்கு அதிகளவு ரசிகர்கள் உருவாகக் காரணமாய் அமைந்துள்ளது. இது ஒரு வெற்றிக்காகப் போராடும் மெய்நிகர் நிகழ்ச்சி (Reality Show) என்றாலும் ஓவியாவின் குணாதிசியம் அல்லது நடவடிக்கைகள் மட்டும் தனித்துத் தெரிந்ததுடன் மட்டுமல்லாது புகழையும் அள்ளித் தந்துள்ளது. சக போட்டியாளர்கள் அதிக தடவைகள் ஓவியாவை வெளியேற்றத்திற்காக பரிந்துரைத்திருந்தாலும் ரசிகர்கள் தங்கள் பொன்னான வாக்கின் மூலம் அவரைத் தொடர்ந்து காப்பாற்றி வந்தனர். சக போட்டியாளர்கள் எங்கே இவர் வெற்றி பெற்றுவிடுவாரோ என்று அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் சக போட்டியாளரான ஆரவ் என்பவருடன் ஏற்பட்ட காதல் உணர்வு தந்த மன அழுத்தத்தை முகாமை செய்யவியலாது தானாக போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். 

ஓவியா தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வரப்போவதில்லை என அறிவித்திருந்தாலும் ரசிகர்கள் இன்னும் தமது எதிர்பார்ப்பைக் கைவிட்டபாடில்லை. நடிகை ஓவியா தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஓவியா தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

குறிச்சொற்கள்: #பிக்பாஸ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Kd dushi

2017-09-29 19:42:37

ஓவியவுக்கு அடுத்து பிந்து மாதவி தான் அழகு..

kd dushi

2017-08-28 06:25:49

நாம் அனைவரும் இந்த விடயத்தை கடைபிடிக்க வேண்டும். அருமையான ஒரு பதிவு..

132

2017-08-22 11:45:43

மண் பயனுற எழுத வேண்டுகிறேன்... இது போன்ற குப்பைகளைத் தவிர்க்கலாமே...

Create AccountLog In Your Account