என்ன மச்சான்? சொல்லு மச்சி!

பதிவர் : சிகரம் பாரதி on 2017-07-16 23:38:35

என்ன மச்சான்?

சொல்லு மச்சி!

என்னத்த சொல்ல?

ஏன்டா சலிச்சிக்கிற?

வீடு போ போங்குது... காடு வா வாங்குது....

அதுவும் சரிதான்
"பிக் பாஸ்" பாத்தியா?

யாருடா பிக் பாஸ்?

யாரு இல்ல, நிகழ்ச்சி...

ஓ! நம்ம விஜய் தொலைக்காட்சியா?

ம்ம்...

நல்லதொரு .குடும்பம்... பல கலைக் கலகம்....

எல்லா கெரகமும் சேர்ந்து கலகம் பண்ணிக்கிட்டிருக்கு

பேஸ்புக், யூடியூப் னு நக்கலும் நையாண்டியும் களை கட்டுது

ம்ம். நாம நிகழ்ச்சியை கலாய்ச்சிக்கிட்டிருக்கோம்னு நெனச்சிக்கிட்டிருக்கோம்.

பின்னே?

அதுதான் இல்ல. அவங்க நம்மள கலாய்க்க வச்சிக்கிட்டிருக்காங்க.

எல்லாம் வியாபாரத் தந்திரம். அப்படித்தானே?

அதே... அதே.....பிக் பாஸெல்லாம் நமக்கு தேவைதானா?

விஜய் தொலைக்காட்சி மேடை நிகழ்ச்சிகள் அதாவது ரியாலிட்டி ஷோ மூலமா தான் தன்னோட இடத்தை தக்க வச்சிக்கிட்டிருக்கு 

ம்ம்... கலக்கப் போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி, ஜோடி நம்பர் வன் மற்றும் சூப்பர் சிங்கர் மாதிரி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமானவங்களாச்சே?

ஒரே இரவுல ஒபாமா ஆகுறது எப்படினு விஜய் தொலைக்காட்சி யோசிச்சப்போ வந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

வீட்டுக்குள்ள இருக்குறவுங்க தான் காசுக்காக அடிச்சிக்கிறாங்கன்னா நாமளும் அவங்களைப் பத்தி விவாதம் பண்ணி அடிச்சுக்கிறோம் 

அவுங்களுக்கு வீடே உலகம், நமக்கு உலகமே வீடு.

அப்புடி சொல்லு மச்சி 

ஆனா நிகழ்ச்சி பத்தி மக்களுக்கு நிறைய சந்தேகம் இருக்கு.

சந்தேகமா? மக்களுக்கா? உலகநாயகன் கமல் நடத்துற நிகழ்ச்சி பத்தியா? என்ன சந்தேகமாம் அவுங்களுக்கு?

வீட்டுக்குள்ள இருக்குறவுங்களுக்கு யாரு சாப்பாடு கொடுக்குறாங்க?

அதான் காட்டுறாங்களே?

மக்கள் கேள்வி கேட்டதுனால காட்டுறாங்க.

சரி, வேற என்ன?

போட்டியாளர்களை வச்சி நடனம் மாதிரியான குட்டி குட்டி நிகழ்ச்சிகள் செய்ய வைக்கிறாங்க. அந்த மேடையை யாரு உள்ள கொண்டுவந்து போடுறாங்க? அவங்க போட்டியாளர்களுக்கு சலுகைகள் ஏதும் செய்றாங்களா?

இதுவரை அதைப்பத்தி காட்டல, நீ கேட்டுட்டேல்ல ... இனி காட்டிருவாங்க.

என்னத்த காட்டுறாங்களோ? காசு குடுத்து, ஒளி, ஒலி பதிவு கருவிகள்லாம் இருக்குன்னு சொல்லியுமே இப்படி நடந்துக்கறாங்கன்னா இதெல்லாம் இல்லாம எப்படி நடந்துப்பாங்க?

அதான் நாம...

அதாவது நாம அவங்க வெளிப்படையா செய்ற தப்பையெல்லாம் மறைமுகமா செஞ்சிக்கிட்டிருக்கோம். அப்படித்தானே?

அப்படியே...

அப்போ நாம வாழ்க்கைல ஒவ்வொரு அடியையும் ரொம்பக் கவனமா எடுத்து வைக்கணும்னு சொல்லு..

க.க.போ!

சரி மச்சி, எனக்கு நெறைய வேலை இருக்கு. நா கிளம்பறேன்.

நாங்க மட்டும் என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம்? எங்களுக்கும் வேலை இருக்கு... நாங்களும் கெளம்பறோம்.

சரி மச்சி. சந்திக்கலாம்.

சரி மச்சான்... சிந்திப்போம்!


குறிச்சொற்கள்: #பிக்பாஸ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

திண்டுக்கல் தனபாலன்

2017-07-17 05:46:21

சிந்திப்போம்...

ராஜி ராமானுஜம்

2017-07-17 03:18:44

காசு போட்டவனுக்கு கல்லா கட்டனும் கத்திக் கலாட்டா பண்ணாத்தான் கடத் தெருவுல திரும்பிப் பாக்க பாக்க பிக் பாஸ் பிக் பஜாரா மாறிக் கல்லா கட்டும். மந்திரங்களை விட தந்திரங்கள் பலிக்கும் வித்தை தொிந்த ஊடகஙகள் உலகமெல்லாம் ஊடுருவி உலா வந்து கொண்டிருக்கும் உண்மையை உணர முயலாமல் முயற்சி கூட செய்யாமல், கருமமே கண்ணாக கடமையே உயிா் மூச்சாக வாழ்ந்து வரும் சாமனியா்கள் சற்றே இளைப்பாற இணையத்துடன் இணைந்து தொல்லைக்காட்சியையும் திரும்பிப் பாா்த்துவிட்டு ஓடுகின்றனா். ஓட்டத்திற்கு இது போன்ற வேகத்தடைகளைப் போட்டுத்தான் கல்லா கட்ட வேண்டிய நிலை ஊடகங்களுக்கு. பாவம் தான் ஊடக வியாபாாிகள். மூளையைக் கசக்கிக் கசக்கித்தான் காசு பாா்க்க வேண்டிய இது போன்ற மாரத்தான் ஓட்டப்பந்தயங்களைப் பாா்வையாளா்களாகப் பாா்த்து விட்டு நமது மாரத்தானில் ஓடிக்கொண்டிருப்போம்.

Create AccountLog In Your Account