நலம் தானா தோழர்களே?

பதிவர் : சிகரம் பாரதி on 2017-07-05 23:30:57

பள்ளிப் பருவமதில்    
பலகதை பேசி
உயிரெனப் பழகி
உயர்தரமதிலே கற்று வந்த
காலங்கள்
கனவு போலாகி
மூன்றாண்டுகள்
முடிந்து போய் விட்டன.


        

ஓரிருவர் தொழிலில்.
இன்னும் சிலர்
இனிதாய் பல்கலைக்கழகம்
பயில்கின்றனர்.
திருமணம் செய்துகொண்டு
திருமதியாகிவிட்டார்
ஒருவர்.
மற்றும் பேரின்
முகவரி கூடத் தெரியாது.

இரண்டாண்டுகள்
இணையற்ற நண்பர்களாய்
இருந்தோம்.
பிரியும் நாள் வந்தபோது தான்
சேர்ந்திருந்த போது
செய்த தவறுகள் உணர்ந்தோம்.
கனவு பல தந்த
காதலையும் தொலைத்துவிட்டு
கசப்பாய்த் தெரிந்த
கல்வியையும் தொலைத்துவிட்டு
விழி பிதுங்கி நின்ற
தோழர்களை எண்ணி
துயரப்பட மட்டுமே முடிகிறது.

ஆண்டுகள் இரண்டில்
ஆயிரம் அனுபவங்கள்.
அத்தனையும் வாழ்க்கைக்கு
அழகான படிப்பினைகள்.
                               
எங்கே இருக்கிறீர்கள்,
எப்படி இருக்கிறீர்கள்
என்னருமை தோழர்களே?
முகவரி தாருங்கள்
முகம் பார்க்க
அலைபேசி இலக்கம் தாருங்கள்
அழைத்துப் பேச
நாடி வருவேன்
நலம் விசாரிக்க
தேடி வருவேன்
தேவைகளை நிறைவு செய்ய!

இப்போதாவது சொல்லுங்கள்!!!
நலம் தானா தோழர்களே???


                                                              ****************************************

இக்கவிதை என்னோடு உயர் தரத்திலே 2007 முதல் 2009 வரை பயின்ற பள்ளித் தோழர்களுக்காக எழுதப்பட்டதாயினும் எனது பதின்மூன்று வருடகால பள்ளித் தோழர்களுக்கும் சமர்ப்பணமாக்குகிறேன். நன்றி தோழர்களே.
                                                              *****************************************
                 
- சிகரம் பாரதி -                       குறிச்சொற்கள்:
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account