சிகரம் பணிக்கூற்று - 2006.06.01 - 2017.06.30

பதிவர் : சிகரம் on 2017-07-02 10:22:39

"சிகரம்" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக்கு மற்றும் இலக்கு ஆகியன முதன் முதலில் வரையறை செய்யப்பட்டன. 2006 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய போதிருந்தே அதனை நிறுவனமாக்கும் கனவையும் கொண்டிருந்தேன். ஆகவே அதற்கான ஒரு படியாக நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் கீழ்வரும் வாசகங்கள் உருவாக்கப்பட்டன. கையெழுத்துப் பத்திரிகை வலைத்தளமாகி இன்று https://www.sigaram.co/ என்னும் முகவரியில் ஒரு இணையத்தளமாக பரிணமிக்கும் இவ்வேளையில் இவ்வாசகங்களை நினைவு கூர்வது அவசியம் என்பதால் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். இவற்றில் காலத்தின் தேவை கருதி சில திருத்தங்கள் 2017.07.01 திகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "சிகரம்" தனது பதினோராவது ஆண்டு நிறைவை ஜூன் மாதத்தில் கொண்டாடும் வேளையில் உலக அரங்கில் தமிழுக்கான தனித்துவமிக்க அடையாளமாக மிளிர்வதற்கான பாதையில் புதிய பரிணாமத்தில் "சிகரம்" பயணிக்கவுள்ளது என்பதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். 

எமது தூர நோக்கு :


சமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்!

எமது இலட்சிய நோக்கு : 


* உலகின் முதற்தர செய்திச் சேவையாக தொழிற்படல்.

* உலகின் அதி உச்ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக திகழுதல்.

* சகல செயற்பாடுகளிலும் சரியானவற்றை சரியாகச் செய்து உலகின் உயரிய தரத்தைப் பேணுதல்.

* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதலும்.

* உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும். 

* மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதல்.
01. எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல்.



02. தமிழையும் தமிழரையும் பாதுகாத்தலும் சகல துறைகளிலும் முன்னேற்றுதலும்.

03. ஒழுக்கம், நேர்மை, நேரம், கடமை,கட்டுப்பாடு, கல்வி என்று சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சட்டபூர்வ நிறுவன முகாமைத்துவக்குழு , ஊழியக் குழு என்பவற்றை அமைத்தல்.

04. மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.

05.01. நடுவுநிலைமையுடன் செயற்படுதலும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுதல்.

05.02. சேவைநோக்குடன் செயற்படும் அதேவேளை அது நிறுவனத்தை பாதிக்காத வகையிலான சேவைகளாக அமைக்கப்படுவதுடன் உச்ச இலாபம் தரக்கூடிய துறைகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படல்.


06. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதல் .

07. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.

08. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.

இது "சிகரம்" இன் 2006 - 2017 ஜூன் வரையான காலப்பகுதியில் எம்மால் முன்கொண்டு செல்லப்பட்ட குறிக்கோள்களாகும். மறுசீரமைக்கப்பட்ட புதிய குறிக்கோள்கள் விரைவில் வெளியிடப்படும்!

- சிகரம் -



குறிச்சொற்கள்:
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account