சிகரம்

இங்கிலாந்து எதிர் இலங்கை - 3வது ஒரு நாள் போட்டி

பதிவர் : சிகரம் on 2018-10-19 19:37:32

இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி 17/10/2018, புதனன்று கண்டி, பல்லேகலையில் இடம்பெற்றது. இம்மூன்று போட்டிகளுமே மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. ஒரு போட்டி டக்வர்த் லூவிஸ் முறையில் முடிவு காணப்பட்டது. 

பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற மூன்றாவது போட்டியும் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெற்றது. பகல் 01.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழை காரணமாக இரவு 08.15 மணிக்கே ஆரம்பமானது. ஆதலால் 21 ஓவர்களுக்குப் போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 21 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்றது. 7.14 என்னும் ஓட்ட விகிதத்தில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியிருந்தது. அடில் ரஷித் அதிக பட்சமாக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 36, சமரவிக்கிரம 35, சந்திமால் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. 

இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கைக் கடந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரோய் 41, மோர்கன் 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணி சார்பில் அபோன்சோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

ஆட்ட நாயகனாக அடில் ரஷித் தேர்வானார். இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி 2-0 என்னும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. நான்காவது ஒரு நாள் போட்டி 20 ஆம் திகதியும் ஐந்தாவது போட்டி 23 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.  
குறிச்சொற்கள்: #ODI #SLvsENG #ICC #England #SriLanka #TamilCricket #CricketScores #SLC #ECB #CricketTour #Kandy #Pallekele #Dambulla #Fixtures #Schedule
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account