சிகரம்

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | 3வது இ-20 போட்டியை மழை கழுவியது

பதிவர் : சிகரம் on 2018-10-15 18:36:59

சிம்பாப்வே அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபது-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தது. தென்னாபிரிக்க அணி ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. 
இந்த நிலையில் நேற்று ஞாயிறன்று இடம்பெறவிருந்த மூன்றாவதும் இறுதியான இருபது-20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கழுவப்பட்டிருக்கிறது. 


இதனையடுத்து 2-0 என்னும் கணக்கில் இ-20 தொடர் தென்னாபிரிக்கா வசமானது. தொடரின் நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்வானார். 


தொடர்ந்து தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளது. 3 ஒரு நாள் மற்றும் ஒற்றை இ-20 போட்டிகளை இத்தொடர் உள்ளடக்குகிறது. 


சிம்பாப்வே அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியதாக இந்த சுற்றுப்பயணம் அமையும். 

குறிச்சொற்கள்: #RSAvsZIM #RSA #ZIM #SouthAfrica #Zimbabwe #T20I #ICC #CricketTour #CricketScores #CricketTamil #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account