சிகரம்

பத்து 10 - கிரிக்கெட் திருவிழா 2018 - சில தகவல்கள்

பதிவர் : சிகரம் on 2018-10-15 00:25:04

கிரிக்கெட் உலகம் நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டு வந்தன. அதன் பின்னர் 20 ஓவர்களைக் கொண்ட போட்டிகள் அறிமுகமாகின. ஐபிஎல் என்னும் கிரிக்கெட் திருவிழா கடந்த பதினோரு வருடங்களாக இடம்பெற்று வருகிறது. 

இது தவிர ஹாங்காங் கிரிக்கெட் சிக்சஸ் என்னும் ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டித்தொடர் 1992ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. இந்த வரிசையில் 10 ஓவர்களைக் கொண்ட பத்து-10 கிரிக்கெட் திருவிழா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பருவம் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த பத்து-10 தொடருக்கு இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சர்வதேச அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. எந்தவொரு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும் இதில் விளையாட இதன்மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாண்டு நவம்பர் 21 முதல் டிசம்பர் 02ஆம் திகதிவரை இரண்டாம் பருவ பத்து-10 கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. இத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். 10 ஓவர்கள், 8 அணிகள், 12 நாட்கள், 29 போட்டிகள் என்னும் அடிப்படையில் இம்முறை கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. 

கேரளா கிங்ஸ், மராத்தா அரேபியன்ஸ், பக்தூன்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், கராச்சியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், நோர்தேர்ன் வாரியர்ஸ் மற்றும் ராஜ்புட்ஸ் ஆகிய எட்டு அணிகளே இம்முறை பங்குபற்றவுள்ளன. கடந்த முதலாம் பருவத்தில் ஆறு அணிகள் பங்குபற்றியிருந்தன. 

இதோ இன்னுமோர் கிரிக்கெட் திருவிழா! பார்த்து ரசிக்கத் தயாராகுங்கள்!! 
குறிச்சொற்கள்: #T10 #T10League #ICC #KeralaKings #Karachians #Pakhtoon #Rajputs #PunjabiLegends #MarathaArabians #BengalTigers #NothernWarriors #UAE #ECB #MulkHoldings #EmiratesCricketBoard #TTenSports
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account