சிகரம்

ஐபிஎல் 2019 - இந்தியாவில் நடைபெறாது?

பதிவர் : சிகரம் on 2018-10-14 16:27:32

கோடிக்கணக்கில் பணம் புரளும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஐபிஎல் திருவிழாவின் பன்னிரெண்டாம் பருவம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 


இந்த ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்காலத்தின் போது இந்தியாவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் 2019 ஐபிஎல் போட்டிகளை தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 


எனினும் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. பொதுத்தேர்தல் குறித்த திகதி உறுதியாக அறிவிக்கப்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும். ஐபிஎல் நிர்வாகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கே முதல் தெரிவை வழங்கியுள்ளது. இயலாத பட்சத்தில் தென்னாபிரிக்காவில் நடாத்தப்படும். 


2009ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவிலும் 2014ஆம் ஆண்டின் முதல் பகுதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் ஐபிஎல் போட்டிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறிச்சொற்கள்: #IPL #IPL2019 #T20 #UAE #RSA #IPL12 #CWC19 #ICC #T10 #INDIA #ELECTIONS #CRICKET #SCHEDULE #SCORES #FIXTURES
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account