சிகரம்

இந்தியா எதிர் மே.இ. தீவுகள் | இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை

பதிவர் : சிகரம் on 2018-10-14 12:49:20

இந்தியா எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 


இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 308 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அருமையாக ஆடிக் கொண்டிருந்தது. இரண்டு வீரர்கள் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்திய அணி 500 ஓட்டங்களைத் தாண்டும் என எதிர்பார்த்திருந்தனர். 
அனால் 3ஆம் நாள் தொடக்கத்திலேயே புதிய பந்தை எதிர்கொள்ள முடியாது இந்திய அணி சரிவைச் சந்தித்தது. மதிய உணவு இடைவேளையில் 367 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 


இந்திய அணி தற்போது 56 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி பெறும் ஓட்ட எண்ணிக்கையைப் பொறுத்து இந்திய அணிக்கான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். 


மேற்கிந்தியத் தீவுகள் அணியை 250 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தால் இந்திய அணிக்கு வெற்றி இலக்கை இலகுவாக அடையக்கூடியதாக இருக்கும். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 350 ஓட்டங்களைக் குவிக்குமானால் இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகவே கேள்விக்குறியாக மாறும். 

குறிச்சொற்கள்: #INDvsWI #INDvsWIN #BCCI #CWI #ICC #India #Windies #WestIndies #CricketScores #TamilCricket #ViratKohli #MegaIcons #PaytmTestSeries #CWC19 #TestCricket #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account