சிகரம்

இந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா

பதிவர் : சிகரம் on 2018-10-14 10:33:58

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலுமே நாணய சுழற்சி ஆதிக்கம் செலுத்தியிருப்பதைப் பார்க்கலாம். 


நாணய சுழற்சி வெற்றியை முதல் போட்டியில் இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதைச் செய்யத் தவறிவிட்டது. 
இந்திய அணி 308/4 என்னும் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் துவங்கியது. ஆனாலும் நாளின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. 


ரஹானே மற்றும் பண்ட் ஆகியோர் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தனர். தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜாவும் ஏமாற்றியுள்ளார். இதனால் இந்திய அணி தடுமாறி வருகிறது. 


இந்திய அணி குறைந்தபட்சம் 450 ஓட்டங்களையாவது முதலாம் இன்னிங்ஸில் பெற வேண்டும். ஆடுகளம் தொடர்ச்சியாக பந்துவீச்சிற்கு சாதகமாக மாறி வரும் நிலையில் நான்காம் இன்னிங்ஸில் வெற்றியிலக்கை துரத்துவது சிரமமானதாகவே இருக்கும். இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்குமா? பார்க்கலாம். 

குறிச்சொற்கள்: #INDvsWI #INDvsWIN #BCCI #CWI #ICC #India #Windies #WestIndies #CricketScores #TamilCricket #ViratKohli #MegaIcons #PaytmTestSeries #CWC19 #TestCricket #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account