சிகரம்

சிகரம் - ஆசிரியர் பக்கம் - 02

பதிவர் : சிகரம் on 2018-10-13 17:14:29

வணக்கம் வாசகர்களே! 

நீண்ட கால இடைவெளிக்குப் பின் "சிகரம்" இணையத்தளம் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நமது "சிகரம்" இணையத்தளத்துக்கு "ஆட்சென்ஸ்" விளம்பர அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் நிலவிவந்த சிக்கல் நிலை காரணமாக "சிகரம்" இணையத்தளத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாதிருந்தது. 

ஆனாலும் அவ்வப்போது வாசகர்களின் வருகை இந்த இணையத்தளத்துக்கு இருந்தது. மேலும் நமது "சிகரம்" வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து நாம் வாசகர்களுடன் இணைந்திருந்தோம். அவற்றுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. 

இலக்கியம், அரசியல், அறிவியல், பல்சுவை மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த இணையத்தளம் இயங்கி வந்தது. ஆயினும் இனிவரும் காலங்களில் இந்த இணையத்தளத்தில் விளையாட்டு மற்றும் வெள்ளித்திரை சார்ந்த செய்திகளையே அதிகம் வெளியிட எண்ணியுள்ளோம். ஏனைய தகவல்களுக்கு நீங்கள் நமது ஏனைய வலைத்தளங்கள் மூலமாக இணைந்திருக்கலாம். அனைத்து தரப்பு வாசகர்களையும் "சிகரம்" இணையத்தளம் மூலமாக அரவணைத்துச் செல்வதே எமது நோக்கம். 

2019ஆம் ஆண்டில் "சிகரம்" இணையத்தள வடிவமைப்பு முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படும். அதன் பின்னர் அனைத்து தகவல்கள் மற்றும் படைப்புகள் அனைத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் - நமது "சிகரம்" இணையத்தளத்தில் வாசித்து மகிழலாம். அதுவரை உங்கள் ஆதரவை "சிகரம்" இணையத்தளக் குழுமத்திற்கு வழங்கிவர வேண்டுகிறோம். 

ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு தனித்துவமிக்க சேவையை வழங்க வேண்டும். உலகின் முதல்நிலை தமிழ் இணையத்தளமாக திகழ வேண்டும். உலகின் அனைத்து செய்திகளையும் அழகு தமிழில் தொகுத்து ஓரிடத்தில் அளிக்க வேண்டும். "சிகரம்" இணையத்தளத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ச்சியாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

-சிகரம் பாரதி 
"சிகரம்" இணையத்தளம் 
குறிச்சொற்கள்: #சிகரம் #ஆசிரியர்_பக்கம் #தமிழ் #முதற்பக்கம் #செய்தி #சிகரம்பாரதி #SIGARAM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account