சிகரம்

சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்

பதிவர் : தங்க. வேல்முருகன் on 2018-06-28 10:08:48

சிகரத்துடன் சில நிமிடங்கள்: 


பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 


கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 


பெயர் : தங்க வேல்முருகன் 

ஊர் : விருத்தாசலம் அருகில், திருமுட்டம் வட்டம், மருங்கூர் கிராமம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. 

படிப்பு : தமிழில் எம்.ஏ, எம்ஃபில்.

வேலை : சிங்கப்பூரில் 

படைப்பு : சமீபத்தில் வெளியிட்ட "நினைப்பதற்கு நேரமில்லை" கவிதை நூல்.


கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 


நல்ல படைப்பு சமூக விழிப்புணர்வு முன்னேற்றத்தைப் பற்றியே இருக்க வேண்டும். 


கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 


விழிப்புணர்வு தேவை 


கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 


மொழிதான் குழந்தைக்குத் தாய் போன்றது. 


கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 


யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது. மற்றவருக்கு உதவிக் கொண்டே மகிழ்வுப்படுத்த வேண்டும். 




கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேணடுமா? 


கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும், எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 


கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 


அழியாது. புத்தக வாசிப்பைத் தூண்டுமளவுக்கு எழுத வேண்டும். மேலும் கணினியும் ஓர் காப்பகம் தானே?


கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 


எடுத்துக் கொள்கின்ற மனநிலையைப் பொறுத்தது. 


கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 


அறிவுமதி, கரிகாலன், இமயம், கண்மணி குணசேகரன், இரத்தின புகழேந்தி. 


கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 


நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். படிக்கவும் படைக்கவும் தூண்ட வேண்டும். 


-சிகரம் 


சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 


தங்க. வேல்முருகன் 


#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM #சிகரம் 





குறிச்சொற்கள்: #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதி
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account