சிகரம்

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

பதிவர் : சிகரம் on 2018-06-23 15:14:10

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

"சிகரம்" இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே?
 
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 
 
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

இந்தப் பத்துக் கேள்விகளுக்குமான பதில்களை விரைவில் எமக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 

பதில்களை கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழிமுறையில் எமக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் பதில்கள் "சிகரம்" இணையத்தளம் மற்றும் "சிகரம் பாரதி" வலைத்தளம் ஆகியவற்றில் வெளியாகும். 

உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உங்கள் புகைப்படம் ஒன்றையும் அனுப்பி வையுங்கள். உங்கள் புகைப்படமும் பதிவில் வெளியாகும். 

"சிகரம்" இணையத்தளத்தின் பதிவுகளை நீங்கள் உடனுக்குடன் பெற விரும்பினால் மற்றும் தொடர்புகளுக்கு எமது வாட்ஸப் சேவை இலக்கத்தை உங்கள் திறன்பேசியில் சேமித்து ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விடுங்கள்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

மின்னஞ்சல் : editor@sigaram.co
                             sigaramco@gmail.com
வாட்ஸப் சேவை : +94728211081

-சிகரம்
 
#105/2018/SIGARAMCO 

2018/06/23 

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 
"சிகரம்" இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே?

#சிகரம்  
குறிச்சொற்கள்: #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account