இராஜராஜர் பராக்...!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-06-02 22:56:46

திக்கெட்டும் முரசுகொட்டி 

விண்ணதிரயிந்த மண்ணதிர,
வந்துவிட்டார் எங்கள்
தென்னாட்டின் தங்கம்,
சிங்கத்திற்கே சிரசதிரும் 
சோழத்தின் கர்ஜனையில்,
இனியெல்லாம் ஜெயமாகும்
வரமாகும்நம் தவம்யாவும்!புல்லர்கள் புறமுதுகிடட்டும்
எள்ளர்கள் எட்டிநிற்கட்டும்,
வீண்பேசித் திரிந்தோரெல்லாம் 
வீதியிலே ஓரம்போகட்டும்,
உலகையொரு குடைநிழலில் 


ஆண்டயெம் மன்னவன்,
தன்குடிலுக்கு வந்துவிட்டாரினி
கூற்றுவன் குருதி தெறிக்கட்டும்!

ஆதவன் வெளிப்பட்டான்-சோழத்தின்
மாதவன் வெளிப்பட்டார்,
தசாவதாரம் தேவையில்லை,
இனியும் வேண்டும்
உலகமதிரும் ஓரவதாரம் 
இராஜராஜ பேரவதாரம்,
திக்கெட்டும் தொலைவெங்கும் 
சோழமேயென்று சங்கேமுழங்கு!

பொன்னிநதியெங்கும் 
புதுப்புனல்திமிரட்டும்
புனல்வெளியில் கயல்துள்ளட்டும்,
வயலெங்கும் பயிர்விளையட்டும்
கலமெங்கும் நெற்செறியட்டும்,
பஞ்சமினி பறந்தோடட்டும்
பகைவரெல்லாம் விரைந்தோடட்டும்,
பார்போற்றும் இராஜராஜன் 
புகழ்வேர்விட்டு விருட்சகமாகட்டும்!

082/2018/SIGARAMCO 
2018/06/02
இராஜராஜர் பராக்...!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
#சிகரம் 


குறிச்சொற்கள்: #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #Raja
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account