சிகரம்

பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது "சிகரம்" !

பதிவர் : சிகரம் on 2018-06-02 02:07:40

வணக்கம் "சிகரம்" வாசகர்களே!


உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய "சிகரம்" பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது "சிகரம்". எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது "சிகரம்". 
இத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் "சிகரம்" கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக "சிகரம்" உருவாகும் என நம்புகிறோம். 
மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல் தொழிநுட்பத்தை முழுமையாக சார்ந்து இயங்கப் போகிற உலகில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தகவல் தொழிநுட்ப உலகை தமிழிலும் முழுமையாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே "சிகரம்" நிறுவனத்தின் நோக்கம். 
"சிகரம்" இணையத்தளம் தமிழ் மொழியையும் தமிழரையும் உலக அரங்கில் தனித்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. "சிகரம்" இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படும். காலத்திற்கேற்ற பொருத்தமான படைப்புகளுடன் உங்கள் விழித்திரைகளை நோக்கி நாம் வருவோம். 
பிறந்திருக்கும் இந்த பதின்மூன்றாம் "சிகரம் ஆண்டு" சிகரம் இணையத்தள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை ஆண்டாக அமைய வேண்டுகிறோம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிகரத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அந்த மக்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் சிகரத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். 


"சிகரம்" - மக்கள் சிகரம்! - தமிழின் சிகரம்!! நம் மண்ணின் சிகரம்!!!


#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary #சிகரம் 

குறிச்சொற்கள்: #சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

பெருவை பார்த்தசாரதி

2018-06-02 15:36:47

வாழ்த்துக்கள்..! ============= பதிவுகள்நல் பலசுமந்து தமிழ்ப் ........பாதைகள் சாலைகளைக் கடந்தது.! நதிபோலத் தவழ்ந்து மேடுபள்ளம் ........நாடியறிந்து நன்றாகத் தழைக்கிறது.! பதிமூன்றாம் ஆண்டில் அடிவைத்து ........பதித்ததுதன் முத்திரையை சிகரமும்.! அதிகாலைக் கதிரவன் போலதுவே .......அன்றாடம் பிரகாசிக்க வேண்டும்.! பெருவை பார்த்தசாரதி

Create AccountLog In Your Account