சிகரம்

வாடாதபூ புன்னகைப்பூ

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-06-01 23:22:46


நெரிசல்களுக்கிடையில்
சிக்கி உழலுகையிலும்,
வியர்வை ததும்பும்
வெம்மைப் பொழுதிலும்,

எத்தனையோ விந்தைகளும் 
சிந்தைகலைக்கும் அழகுகளும்,
இனம்புரியாத ஏக்கத்திலும்
இதயம்கவ்வும் சோகத்திலும்,

தனிமைநிறைந்த வெறுமையிலும்
உறவுசூழ்ந்த இடைஞ்சலிலும்
முற்றும்தொலைந்து வற்றிப்போன
இதயக்கூட்டில் இன்பம்,

எச்சமின்றி காய்ந்திருக்கும்
ஆழ்மனதில் மிச்சமொன்று
கிளர்ந்துயெழ உந்தனழகுமதி
வதனம்கண்டு புன்னகைப்பூக்குமடி!

கண்ணம்மா...
குறிச்சொற்கள்: #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #Poem #Tamil #Kavinmozhivarman #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

பரஞ்சோதி சீனிவாசன்

2018-06-02 20:27:51

அய்யா! வணக்கம். தாங்கள் வலைதளம் என் பார்வையில் காணும் பாக்கியம் இப்பொழுது தான் கிட்டியது. இவ்வலைதளத்தில் நான் என் கவிதையை எவ்வாறு பதிவிடுவது என தெறியவில்லை. தயவு செய்து உதவுங்கள்.

Create AccountLog In Your Account