சிகரம்

கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-04-04 00:58:48

அதிகாரம் 65

சொல்வன்மை 

 

****

 

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 

உணர விரித்துஉரையா தார்

(குறள் 650)

 

*****

 

மணமற்ற மலர்கள்!

 

******

 

வீட்டினில்

விடுதி தன்னில்

விழாக்களில்

பல இடத்தில்

செயற்கையாம்

மலர்கள் தன்னை

மிகுதியாய்

அலங்க ரிப்பர்,


கொத்துகள்

கொத்தாய் அங்கே

கோடியாய்

அவையி ருந்தும்

கண்களை

நிறைக்கு மல்லால்

நறுமணம்

உண்டோ சொல்வீர்?
தன்வீடு

முழுதும் ஆங்கே

தலையணை

போன்ற நூல்கள்

பன்நூறு

அடுக்கி வைத்துப்

படித்தவர் ஆனபோதும்,


கற்றுநாம்

உணர்ந்த செய்தி

கல்லாதார்

கண் திறக்க

உதவவேப்

பேசா ராகில்

ஊமைக்கு

நிகர்தா னென்றான்,எவருக்கும்

பயன்ப டாது

இருக்கின்ற

மனித ரெல்லாம்

மணமற்ற

மலரே யென்று

மனம்வெம்பி

எழுதி வைத்தான்!

 

****

 

இணர்ஊழ்த்தும் - கொத்துக் கொத்தாக இருந்தும்.


நாறா - மணம் இல்லாத.

 

*****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி .

21.02.2018.

 

#089/2018/SIGARAMCO 

2018/04/04

கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 

குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account