சிகரம்

சிகரம் வலைப்பூங்கா - 01

பதிவர் : சிகரம் on 2018-03-31 01:04:42

வணக்கம் நண்பர்களே! தமிழ் இணைய உலகில் ஆயிரமாயிரம் அருமையான தமிழ்ப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எங்கள் கண்ணில் பட்ட சில நல்ல பதிவுகளை சிகரம் வலைப்பூங்காவில் தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


"சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி" என்னும் மகுட வாசகத்தைத் தாங்கி படைப்புகளை வழங்கி வருகிறது "ஒரு ஊழியனின் குரல்" வலைத்தளம். அந்த வலையில் இருந்து இன்று நம் வாசிப்புக்கு தீனி போடப் போவது "சமரசம்" சிறுகதை.
நம் வாழ்க்கையில் நாம் பல விடயங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் சில நேரங்களில் சமரசங்களால் ஆனதாகவே மாறி விடுகிறது. அப்படி ஒரு நாதஸ்வர கலைஞர் சமரசம் செய்து கொள்ள வேண்டியேற்படும் சூழலை அற்புதமாக தனது கதையில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை - சமரசம்.


"எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோர்த்தபடி" பயணித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவு தான் நமது "முத்துச்சரம்" வலைப்பதிவு. வலைப்பதிவர் ராமலக்ஷ்மி தான் எடுத்த உழைக்கும் சாமானியர்களின் படங்களை "காற்றோடு போனது... - டெகன்  ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்" என்னும் பதிவினூடாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். நீங்களும் அந்தப் புகைப்படங்களை ஒருமுறை பார்வையிடலாமே?


வலைத்தளங்களில் நமக்கு உதவி தேவையெனில் உடன் ஞாபகத்துக்கு வருபவர் "பிளாக்கர் நண்பன்" அப்துல் பாசித். அண்மையில் கூகிள் நிறுவனம் தனது ஆட்சென்ஸ் சேவையை தமிழ் இணையத்தளங்களுக்கும் வழங்க முன்வந்ததை அடுத்து அது சம்பந்தமான முக்கியமான பதிவுகளை நண்பர் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை உங்களுக்காக இதோ:"தமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்" மற்றும் "ஆட்சென்ஸில் எவ்வளவு சம்பாதிக்கலாம்?" உள்ளிட்ட நிறைய பதிவுகள் இங்கே இருக்கின்றன. நீங்களும் படித்துப் பயன் பெறுங்கள்.

 

இது அறிமுகப் பதிவு என்பதால் சில பதிவுகளை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறோம். அடுத்தடுத்த பதிவுகளில் உங்கள் மனம் கவர்ந்த ஏராளமான வலைப்பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறோம். நீங்களும் உங்கள் மனம் கவர்ந்த பதிவுகளை சிறு குறிப்புடன் எமக்கு அனுப்பி வையுங்கள். sigaramco@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் எழுத்துக்களைத் தட்டி விடுங்கள். அல்லது இது போன்ற தொகுப்புக்களை நீங்களும் உங்கள் வலைப்பதிவுகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். வாசிப்பு பெருகட்டும்! 


#085/2018

2018/03/31

சிகரம் வலைப்பூங்கா - 01

#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 

#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 

#சிகரம் 


குறிச்சொற்கள்: #sigaram #sigaramco #tamil #tamilblogs #reading #வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account