சிகரம்

கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-03-29 01:04:50

அதிகாரம் 65

சொல்வன்மை 

 

*****

 

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து

ஓம்பல் சொல்லின்கண் சோர்வு 

(குறள் 642)

 

*****

 

நன்றும் தீதும்

நாக்கே செய்யும்!

 

****

 

பேசவே

தெரியு மென்று

பெருந்திமிர்

கொண்டு நாமும்

தேவையே

இல்லாப் பேச்சுத்

தினம் பேசித்

திரிதல் நன்றோ?


செல்கின்ற

இடத்தி லெல்லாம்

அறிமுகம்

இல்லாப் போதும்

பிறரிடம்

வலிந்து சென்று

பேசியே

கொல்லல் நன்றோ?
யாரையோ

பற்றி நாமும்

ஓரிடம்

சொன்ன வார்த்தை

தீயினைப்

போல் வளர்ந்து

தேடியே

நமைய ழிக்கும்!


பழமதை

நறுக்கக் கத்தி

பயன்படும்

நன்மை செய்யும்

கொலைசெய்ய

அந்தக் கத்தி

முனைந்திடின்

குற்றம் தானே?


நன்மையும்

தீமையாவும்

நாக்கினால்

வருவ தாலே

கவனமாய்

இருக்கச் சொல்லி

கருத்துநூல்

எழுதி வைத்தான்!

 

****

 

காத்துஓம்பல் - பிழைவராது காத்துக் கொள்ளுதல்.


சோர்வு - குற்றம்.

 

*****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி.

20.02.2018.


#084/2018
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்   

குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account