சிகரம்

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-03-25 22:58:45

சாத்திரமும் ஆத்திரமும் 

காலத்திற்கு தடையில்லை,

கோத்திரங்கள் தேவையில்லை 

சேத்திரத்தில் லாபமில்லை!


காற்றிருந்திடவே தூற்றிடணும் 

வாலிபவயதில் உழைச்சிடணும்,

காலம்நேரம் பார்த்திடாமல் 

நாளும்பொழுதும் முயன்றிடணும்!


அயரும்நொடியில் ஆயிரமாய் 

அதிசயமாகுது பூவுலகம், இமைத்திடும் 

நொடியும் இழப்புகள்கோடி கண்டே

நகருது இவ்வுலகம்!
சமைத்திடக்கூட நேரமின்றி 

விரைவுஉணவகம் தேடுகின்றோம்,

சாத்திரம்பேசும் சிலமனிதர் 

பொழுதைவீணே இழக்கின்றார்!


படித்திடும்போதும் உழைத்திடணும் 

படுக்கையில்தூங்க மறுத்திடணும்,

நடந்திடும்போதே தூங்கிடணும் 

நாளுமுழைத்தே வாழ்ந்திடணும்!


பூனை கண்களை மூடிக்கொண்டால் 

பூகோளம்இருண்டிட போவதில்லை!

காலமும்நேரமும் காத்திருக்க 

கடவுளாயினும் பயனில்லை!


வேலைநேரம் பார்ப்பார்கள் 

வீணாய்பொழுதைக் கழிப்பவர்கள்,

காலம்நேரம் பார்ப்பதில்லை 

கடமையே கண்ணாய் இருப்பவர்கள்!


இந்நொடியென்பது உனதாகும் 

மறுநொடியாருக்கும் நிலையில்லை,

இக்கணமேசெயலை முடித்துவிடு 

மறுமுறையென்பதை மறந்துவிடு!


காலம்நேரம் யாருக்கும் 

காத்திருக்கவும் போவதில்லை,

வாழும்நாளை வளமாக்க 

உழைத்திடுநாளும் விரைவாக!


#கவின்மொழிவர்மன்

 
#082/2018/SIGARAMCO
2018/03/25
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்

குறிச்சொற்கள்: #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account