சிகரம்

கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்?

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-03-24 01:30:10

அதிகாரம் 64

அமைச்சு

 

*****

 

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் 

தெவ்வோர் எழுபது கோடி உறும் 

(குறள் 639)

 

****

 

துணையே பகையானால்?

 

*****

 

கத்தியைக்

கையில் வைத்துச்

சுற்றியே

நமை எதிர்க்கும்

பகைவர்க்கு

அஞ்ச வேண்டாம்

பார்த்துநாம்

விலகல் கூடும்,


தோள்தனில்

கையைப் போட்டுத்

தோழமை

மிக்கக் காட்டிப்

பழகுவோர்

உள் மனத்தில்

பகையெண்ணி

இருப்பா ராயின்,
என்றைக்கோ

ஓர்நாள் நம்மை

எதிரியின்

வலையில் வீழ்த்தி

அழித்திட

முனைவார் நாமோ

அவருக்கே

அஞ்ச வேண்டும்,


எழுபது கோடியானும்

எதிரினில்

நின்று விட்டால்

பகையெனத்

தெரியக் கூடும்

பகைவெல்ல

முடியும் நம்மால்,


அருகினில்

இருப்போர் தம்மை

அலசிநாம்

ஆய்தல் வேண்டும்

ஏமாந்து

போவோ மானால்

எதிரிக்கே

வெற்றி யென்றான்!

 

***

 

தெவ்வோர் - பகைவர்.


உறும் - நிகராகும்.

 

*****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி.

19.02.2018.#080/2018

2018/03/24

கவிக்குறள் - 0013 -  துணையே பகையானால்? #SigaramCO

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  

#சிகரம்   

 

 


குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account