சிகரம்

எழுவாய் தமிழே!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-03-05 00:13:19

எழுவாய் தமிழே!

தன்மையாய் முன்னிலை 

வகித்து-உந்தன்

படர்க்கை விரித்திடு!


இலக்கணம் வகுக்கத்தொல் 

காப்பியங்களும்

ஈரடியில்திருக் குறளும்,

நாலடியாய் பாக்களும்,


இன்பம்கொள்ள கலித் தொகையும்,

ஐந்திணை விளங்க நற்றிணையும் 

சிறிதுபெரிதென குறுந்தொகையும்,

ஐங்குறுநூறாய் பதிற்றுப்பத்தாய்
ஓங்கிஒலிக்கும் பரி பாடலுடன்

அகம் புறமென விரு

நானூறு பாவகையும்,

எத்தனை யெத்தனை

ஆற்றுப்படைகள் அம்மம்மா!


சிலம்புகளில் அதிகாரமாய்,

மணிகளில் கண்டேன்

மேகலைகள் அந்த

சீவகனுக்கோ சிந் தாமணி

எவர்க்கும்

வளையா பதியாய்

காதிருக் குண்டல கேசியெனும்


ஐம்பெரும்

காப்பியங்கள் அழகழகாய் 

எட்டுத்தொகை நூல்களும்

மூவாறுமேன் கணக்கு நூல்களும்

மூவாறுகீழ் கணக்கு நூட்களு மின்னும்


இயைந்ததெல்லாம் இலக்கியமாய் 

இடையிடையே இலக்கணமாம்!

அறம்வளர்க்க மொருநூலும்,

அகமுரைக்க வொருநூலும்,


மறம் வளர்க்க வொருநூலு மனி 

தமுரைக்க வொருநூலும்,

அடுத்த நற்கெல்லாம் இலக்கணங்கள் 

அனைத்தையு முரைக்கும் இலக்கியங்கள்,


மருத்துவ மென்றால்

அதிலுண்டு மாயப் புதுமை

அறிவியல் வெகுவுண்டு,

வானிலை சாத்திரம்

உலகுரைப்போம் நாங்கள்

வாழ்நிலை பக்தியை

யதில் வளர்ப்போம்!


அணுக்களின் நகர்வை யுரைத்திடுவோம்,

அண்டங்கள் கடந்து

படர்ந்திடுவோம்!

சிறகுகள் வேண்டாம்

விரைந்திடுவோம் சிந்தனை

யதிலே பறந்திடுவோம்!


#074/2018

2018/03/05

எழுவாய் தமிழே! 

பதிவர் : கவின்மொழிவர்மன் 

#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM 

#சிகரம்

குறிச்சொற்கள்: #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account