சிகரம்

கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-03-04 10:20:27

அதிகாரம் 66

வினைத்தூய்மை 

 

******

 

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் 

வேண்டிய எல்லாம் தரும் 

(குறள் 651)

 

******

 

நற்றுணையும்

நற்செயலும்!

 

***

 

அறிவினில்

உயர்ந்தோர் தன்னை

அலசிநாம்

தேர்வு செய்து

நட்பதாய்க்

கொண்டு வாழ்ந்தால்

நமக்கென்றும்

குறையே இல்லை,


என்னுடை

வாழ்க்கை தன்னில்

இருபெரும்

நண்பர் வாய்த்தார்

சுப வீர

பாண்டி நட்பும்

கவிச்சுடர்

பித்தன் நட்பும்
இருவரின்

துணையி னாலே

இன்றுநான்

வெளியில் வந்தேன்

எனக்குள்ள

ஆற்றல் சேர்த்து

இயன்றதைச்

செய்யக் கற்றேன்,


நல்லதோர்

துணையி னோடு

நாமுமே

முயற்சி செய்தால்

முடியாத

செயலைக் கூட

முடித்துநாம்

வெற்றி காண்போம்,


வினையெனில்

செயல தாகும்

துணையெனில்

நல்ல நட்பாம்

இரண்டும்நம்

வாழ்வில் சேர்ந்தால்

எதிலுமே

வெற்றி யென்றான்!

 

*****

 

ஆக்கம் - வெற்றி, உயர்வு.


வினைநலம் - நற்செயல்.

 

*****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி ,

22.02.2018.

 

#073   

2018/03/04

கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!    

 
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   

 

 

குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account