சிகரம்

மூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை!

பதிவர் : சிகரம் on 2018-02-22 00:18:17

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர், பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் இருபது-20 தொடர் என மூன்றையும் இலங்கை அணி வென்றுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணி அதிகளவான போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. அணி வீரர்களை விதம் விதமாக மாற்றியும் எதுவும் பலன் தரவில்லை. இது இலங்கை அணி மீதும் நிர்வாகத்தின் மீதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இறுதி நடவடிக்கையாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி வழங்கிவந்த இலங்கையைச் சேர்ந்த ஹத்துருசின்ஹ இலங்கைக் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார்.

அவர் பொறுப்பேற்ற பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் சுதாகரித்து எழுந்து நின்று கொண்டது இலங்கை அணி. தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி. வரும் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கவுள்ள இருபது-20 முத்தரப்பு தொடரிலும் இலங்கையின் வெற்றிப்பயணம் தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account