சிகரம்

இ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி!

பதிவர் : சிகரம் on 2018-02-21 22:28:32

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கெதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று தனது இ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று இ-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என்னும் அடிப்படையிலும் ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்னும் அடிப்படையிலும் கைப்பற்றிக் கொண்டன.
ஞாயிறன்று இடம்பெற்ற முதலாவது இ-20 போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது. சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்திய தேசிய அணியில் விளையாடினார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 25 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் ஷிக்கார் தவான் 72 ஓட்டங்களையும் தென்னாபிரிக்க அணி சார்பில் ரீஸா ஹென்றிக்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்று அதிரடி காட்டினர். பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இன்று இடம்பெறவுள்ள போட்டி தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாகும்.


#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS  

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account