சிகரம்

கவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை!

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-02-18 00:49:31

அதிகாரம் 59

ஒற்றாடல்

 

****

 

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் 

ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள் 589)

 

*****

 

துப்புக்கும் துப்புவை!

 

*****
நாட்டினை

ஆட்சி செய்யும்

நல்லதோர்த்

தலைவ னுக்குப்

பலவகை

உதவி வேண்டும்

படைபலம்

நன்கு வேண்டும் ,


அதனினும்

சிறந்த ஒன்று

அவனுக்கு

என்ன வென்றால்

எதனையும்

அறிந்து சொல்லும்

தனிவகை

ஒற்றர் வேண்டும் ,


ஒற்றர்கள்

உண்மை யாக

உரைக்கின்ற

தன்மை ஆய

ஒற்றரை

மற்றோர் ஒற்றால்

ஒற்றாடச்

செய்தல் வேண்டும் ,


நிலைபெற்று

ஆட்சி செய்யப்

பழியெண்ணா

ஒற்றர் வேண்டும்

விழிப்புடன்

இருந்தால் தானே

தவிர்க்கலாம்

அழிவை யென்றான் ,


காவலன்

கள்வ னானால்

காத்திடல்

யாராலாகும்

காவலைக்

காவல் செய்து

கவனமாய்

ஆள்க வென்றான்!

 

****

 

ஒற்றர் - துப்புஅறிபவர்.


பொருளையும் - சொன்ன செய்தியையும் .


ஒற்றிக்கொளல் - தெரிந்துகொள்ள வேண்டும் .

 

****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி .

07.02.2018.

 

#058

2018.02.18 

கவிக்குறள் - 0007 - துப்புக்கும் துப்புவை!  

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி 
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்       

 


குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account