சிகரம்

அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16

பதிவர் : சிகரம் on 2018-02-17 00:28:40

கிரிக்கெட் அணிகளின் 2018.02.16 திகதி நிலவரப்படியான தரப்படுத்தல்கள் இதோ: 


1 - இந்தியா 

2 - தென்னாபிரிக்கா 

3 - அவுஸ்திரேலியா 

4 - நியூசிலாந்து 

5 - இங்கிலாந்து 

6 - இலங்கை 

7 - பாகிஸ்தான் 

8 - மேற்கிந்தியத் தீவுகள் 

9 - பங்களாதேஷ் 

10 - சிம்பாப்வே 
எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 3-1 என கைப்பற்றும் பட்சத்தில் தென்னாபிரிக்கா மூன்றாம் இடத்திற்குப் பின்தள்ளப்படும். தொடரும் டெஸ்ட் போட்டிகளால் இந்திய அணிக்கு தரப்படுத்தலில் மாற்றம் இருக்காது.

 

தொடரும் டெஸ்ட் போட்டிகளின் பின்னர் இலங்கை அணி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான தொடரை 2-0 என இங்கிலாந்து கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை இலங்கை 3-0 என கைப்பற்ற வேண்டும். அல்லது மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரை இலங்கை 2-1 என கைப்பற்ற இங்கிலாந்து இரு தொடர்களையும் 2-0 என இழக்க வேண்டும்.  

 

இங்கிலாந்து இரு தொடர்களையும் 1-1 சமப்படுத்துமானால் இலங்கை 3-0 என வெற்றி பெற்றாலும் 6ஆம் இடத்திலேயே இருக்கும். அதே நேரம் இலங்கை தொடரை 3-0 என இழந்தாலும் இலங்கை பின்னடைவை சந்திக்காது. பார்க்கலாம் கிரிக்கெட் ஆடுகளத்தின் தீர்மானம் எதுவென...

 

#055

2018.02.17

அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16  

பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #CRICKET #ICC #ICCRANKINGS
#சிகரம்   

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account