வணக்கம்!
உலகத் தமிழர்களின் நுழைவு வாயிலாக விளங்கும் மலேசிய மண்ணில் தமிழ்ப் பெண்களின் ஆளுமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ்ப் பெண்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்முகமாய்த் திரைமீளன் ஒரிசா பாலு ஐயா அவர்களால் 2016, சூன் மாதம் தொடங்கப்பட்டு, பெண்களின் தனித்திறன் போற்றி வரும் ஐயை அமைப்பும் முனைவர் இலட்சுமி கார்மேகம், தொழில் முனைவோர் திருமதி விசித்திரா சரவணக்குமார் அவர்களால் 2017, அக்டோபர் மாதம் கனடாவில் தொடங்கப்பட்டு தமிழ்ப் பெண்கள் தரணியின் கண்கள் என்னும் முழக்கத்துடன் பெண்களால் பெண்களுக்காகப் பெண்களாலேயே நடத்தப்படும் பன்னாட்டு இணைய இதழான இணையத் தோழியும் இணைந்து மகளிர் நாளான மார்ச் 17 அன்று "உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாட்டை" நடத்த உள்ளோம்.
மாநாட்டில் ஆய்வுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஆய்வரங்கம், கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கலையரங்கம் அமைக்கப்பட்டு உலகளாவிய தமிழ்ப் பெண்களின் பேராற்றல் போற்றப்படும். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஆர்வமுள்ள தமிழ்ப் பெண்கள் அனைவரும் மாநாட்டில் கட்டுரை வழங்குவதற்கும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமான இணைய வழி ஏற்பாடுகள் செய்யப்படும். உலகம் உய்ய தொண்டாற்றி வரும் தமிழ்ப் பெண்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் "ஐயை விருது" வழங்க உள்ளோம். பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஓவியப்போட்டியும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புலனக்(வாட்சப்) காணொளி போட்டியும் நடத்த உள்ளோம்.
மாநாட்டின் மையநோக்கு:
"சங்ககால மகளிர் மரபு, வேலுநாச்சியார் மறம், இரண்டாம் உலகப்போரில் போரிட்ட மலேசியத் தமிழ்ப் பெண்களின் போர்ப்படையை" உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் முயற்சியை மைய நோக்காகக் கொண்டு 2018 ஆம் ஆண்டிற்கான மாநாடு இயங்க உள்ளது.
ஆய்வுப் பொருண்மை:
"உலகத் தமிழ்ப் பெண்களின் திறன்" என்னும் பொருண்மையை மையமிட்டு பல்துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழ்ப் பெண்களின் திறமையை அடையாளப்படுத்தும் வகையில் அறிவியல், இலக்கியம், கலை, மொழி, சமூகம் முதலான புலங்களில் கட்டுரை அமைதல் வேண்டும்.
அளவுகோல்:
ஆய்வுச் சுருக்கம் - ஒரு பக்கத்தில் அமைதல் நலம்.
ஆய்வுக்கட்டுரை - 5-6 பக்கங்கள் மிகாது இருத்தல் வேண்டும்.
எழுத்துரு - யுனிகோடு / பாமினி (தமிழ்)
மொழி - தமிழ்/ ஆங்கிலம்
மின்னஞ்சல்: inaiyathozhi@gmail.com
முக்கியமான நாட்கள்:
கட்டுரை வழங்க நிறைவு நாள் : 15.02.2018
மாநாடு நடைபெறும் நாள் : 08.03.2018
*பதிவுக் கட்டணம் இல்லை**
உலகளாவிய ஒருங்கிணைப்பாளர் :
திரைமீளன் ஒரிசா பாலு +9199402 40847
முனைவர் இலட்சுமி கார்மேகம் +919094107500
டத்தின் தாமரைச்செல்வி +60 10-520 7663
இந்திய ஒருங்கிணைப்பாளர்:
தொழில்முனைவோர் விசித்திரா சரவணக்குமார் 72 99 074353
மலேசிய ஒருங்கிணைப்பாளர்:
திருமதி மலர்விழி பாஸ்கரன் +60 16-623 6471
#052
உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்
தகவல் : உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018
#SIGARAM #SIGARAMCO #WTGC2018 #WORLDTAMILGIRLSCONFERENCE2018 #சிகரம் #உலகத்தமிழ்ப்பெண்கள்மாநாடு2018
Glad to know about conference exclusively for women