சிகரம்

இந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI

பதிவர் : சிகரம் on 2018-02-12 01:51:34

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகளைக் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் அடிப்படையில் தென்னாபிரிக்கா கைப்பற்றியது.


நேற்றைய தினம் (2018.02.10) நிறைவடைந்த நான்கு ஒருநாள் போட்டிக்குப் பின் இந்திய அணி 3-1 என முன்னிலையில் உள்ளது. தொடர்ச்சியாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளையும் வென்ற இந்திய அணி நான்காம் ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
3973வது ஒருநாள் போட்டியான நான்காம் ஒருநாள் போட்டி இரவு-பகல் ஆட்டமாக நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 5.78 என்னும் ஓட்ட விகிதத்தில் ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.


ஷிக்கார் தவான் 109, விராட் கோலி 75 மற்றும் மகேந்திர சிங் தோனி 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரபாடா மற்றும் எங்கிடி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


போட்டியின் இடைநடுவே மழை குறுக்கிட்டதனால் தென்னாபிரிக்க அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறையில் 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


வெற்றி இலக்கை தென்னாபிரிக்க அணி 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் கடந்து வெற்றியைத் தனதாக்கியது. 25.3 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக கிளாசின் 43 ஓட்டங்களையும் மில்லர் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


போட்டியின் நாயகனாக கிளாசின் தெரிவானார். ஐந்தாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 13ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா தொடரைக் கைப்பற்றுமா அல்லது தென்னாபிரிக்கா தொடரைச் சமப்படுத்துமா? 


இந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI - சிகரம் 


#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #ODI #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #ODI #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account