சிகரம்

முதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்

பதிவர் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 on 2018-02-10 08:48:58

முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு – 2018 இந்தியா, தமிழகம், குமாரபாளையத்தில் 2018 மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. அதற்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. தற்போது மாநாட்டு நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக ஏறு தழுவுதல் நடைபெற ஆவண செய்யப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி நிரல்


முதல் நாள் 01.03. 2018

(வியாழக்கிழமை)


காலை 10.00 மணி - திருவள்ளுவர் சிலை சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்படும்

காலை 10.10 மணி - மூலிகைக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, இலவச சித்த மருத்துவ முகாம் ஆகியவற்றை திறந்து வைத்தல்

காலை 10.20 மணி - மாநாட்டு தொடக்க விழா

மதியம் 12.15 மணி - சிறப்பு சொற்பொழிவுகள்

மதியம் 01.30 முதல் 02.30 வரை உணவு இடைவேளை

பிற்பகல் 02.30 மணி – அமர்வு -1- பண்பாட்டியல் அமர்வு

(கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரங்கம்)

மாலை 04.00 மணி - அமர்வு –2– தொல்லியல் அமர்வு

(மயிலை சீனி வேங்கடசாமி அரங்கம்)

மாலை 05.30 மணி - தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள்

(எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்)

மாலை 06.30 மணி - குமாரபாளையத்தில் தமிழ் பாரம்பரிய விழா
இரண்டாம் நாள் 02.03.2018 (வெள்ளிக்கிழமை)


காலை – 09.30 மணி - சிறப்பு சொற்பொழிவு

காலை – 11.30 மணி - அமர்வு – 3 – இறையியல் அமர்வு

(வள்ளலார் அரங்கம்)

மதியம் – 01.30 – 02.30 மதிய உணவு இடைவேளை

பிற்பகல் – 02.30 மணி அமர்வு – 4 – சமூகவியல் அமர்வு

(அயோத்திதாசர் அரங்கம்)

மாலை 03.30 மணி - அமர்வு – 5 – மொழியியல் அமர்வு

(புலவர் குழந்தை அரங்கம்)

மாலை 04.30 மணி - நிறைவுவிழா - சிறப்பு சொற்பொழிவுகள்
மூன்றாம் நாள் 03.03.2018 (சனிக்கிழமை)


காலை - 10 மணி முதல் - நம்ம குமாரபாளையம் அமைப்பு நடத்தும் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டான "ஏறுதழுவல்" (ஜல்லிக்கட்டு) நடைபெறும்.

 

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 இன் உத்தியோகப்பற்றற்ற இணைய ஊடகப் பங்காளராக ஆரம்பம் முதல் செயற்பட்டு வரும் "சிகரம்" இணையத்தளம் மாநாடு தொடர்பில் கிடைக்கப்பெறும் செய்திகளை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

 

#சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WORLDTAMILHERITAGECONFERENCE2018


முதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்  - சிகரம் குறிச்சொற்கள்: #சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WORLDTAMILHERITAGECONFERENCE2018
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account