சிகரம்

கவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்!

பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-02-09 09:33:26

திருக்குறள் 

அதிகாரம் 60

ஊக்கம் உடைமை


***


வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு (குறள் 595)


*****


எண்ணமே அளவாகும்!


****


வள்ளுவன்

ஓர்நாள் தன்னூர்க்

குளக்கரை

சென்ற மர்ந்து

அக்குளம்

பூத் திருந்த

அல்லியின்

அழகைக் கண்டான் ,


இரவினில்

இடியும் மின்னல்

இடைவிடா

மழை பொழிந்து

குளத்திலே

நிறையத் தண்ணீர்

கொண்டுமே

உயர்ந்த தங்கே,
மறுநாளும்

அங்கே சென்று

மகிழ்வுடன்

குளத்தைப் பார்த்தான்

நேற்றைக்குக்

கீழே நின்ற

மலரெல்லாம்

மேலே கண்டான் ,


முழங்காலின்

அளவே நின்ற

மலரெல்லாம்

கழுத் தளவு

தண்ணீரின்

மேலே வந்து

தமைப் பார்த்துச்

சிரிக்கக் கண்டான் ,


ஆகாகா

மனிதர் வாழ்வும்

அவரெண்ணம்

அளவே நிற்கும்

உயர்வுக்கும்

தாழ்த லுக்கும்

உன்உள்ளம்

அளப்பாய் என்றான்!

 

*****

 

அனைய - அந்தஅளவு.

 

****

 

மானம்பாடி புண்ணியமூர்த்தி.

09.02.2018.


அடித்தளம் அன்பைவைத்து

அதில்தூணாய் அறிவைநட்டு

வாழ்வினைக் கட்டுவோர்க்கு

வளங்களும் நலமும்சேரும்!

 

***

நிறைமன அன்பின் ....


வணக்கமும் வாழ்த்துகளும்!

 

#039

கவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்!


பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி 

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை

#சிகரம்      

குறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account