சிகரம்

மேகராகம்

பதிவர் : பாலாஜி on 2018-01-22 23:48:18

மழையின் மோகங்கள் யாரறிவார் - இந்த

மங்கையின் மனம்தனை யாரறிவார்
சிந்திய கண்ணீர் முத்துக்களை நான்

சேர்த்தெடுத்தோர் மாலை கட்டிவைத்தேன்

சீறும் அலைகளின் சீற்றத்தினை அதில்

சிப்பிகளாய் நானும் இட்டு வைத்தேன் - மோகக்


கருமேகங்கள் கலைந்தோர் கணத்தினில்

பெருமழை யாய்வீழ்ந்து பொழிந்திடுமே - அன்று

பேரிடியாய் மனதின் ஆசைக ளெல்லாம்

வீழ்ந்திடப் புவியே கலங்கிடுமே !


-கி.பாலாஜி

29.10.2017

சரஸ்வதி பூஜை தினம்

 

#sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி 

 

மேகராகம் - சிகரம் 

 

குறிச்சொற்கள்: #sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account