சிகரம்

வீழ்வேனென்று நினைத்தாயோ!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-12-26 15:30:03

பிறந்து விட்டே

னிவ்வுலகில்

வாழ்ந்திட

வேண்டு மென்றே,


கிடைத்ததை கொண்டு

நடப்பது விதியென நம்பி,

தத்து வார்த்தங்கள்

பலப் பேசி,

இதயத்தால் அழுது

உதட்டால் சிரித்து,
உள்ளத்துள் நடுங்கி

வெளியில் சிலிர்த்து,

மனத்தால் வெறுத்து

மனிதர் க்காய் விரும்பி,


சுயத்தை இழந்து

பொய்யாய் வாழ்ந்திடும்,

பல வேடிக்கை

மனிதரைப் போல்

வீழ்வே னென்று

நினைத் தாயோ!


-கவிஞர் கவின்மொழிவர்மன்

குறிச்சொற்கள்: #கவிதை #கவின்மொழிவர்மன்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account