சிகரம்

பேருவகை கொள் மனமே

பதிவர் : முனீஸ்வரன் on 2017-12-17 12:42:08

பேருவகை கொள் மனமே 

பேருவகை கொள்....

அன்பின் அறிவின் மொழியாம்

தமிழின் மேல்...


போற்றுதல் கொள் மனமே

போற்றுதல் கொள்...

தமிழை போற்றிக் கொள்ள

வாய்ப்பை பெற்றதற்கு...
புரிதல் கொள் மனமே

புரிதல் கொள்....

பகைக்கும் பகடை உருட்டும்

படைக்கும்....


தேறுதல் கொள் மனமே

தேறுதல் கொள்....

தமிழினி மெல்ல

சாகுபடியாகும் - என

தேறுதல் கொள்....


கவிஞர் முனீஸ்வரன்

                    17/11/17


பேருவகை கொள் மனமே  - கவிதை 


#கவிதை #முனீஸ்வரன்     

குறிச்சொற்கள்: #கவிதை #முனீஸ்வரன்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account