சிகரம்

குறளமுதம் - 0001

பதிவர் : பௌசியா இக்பால் on 2017-12-16 00:42:39

அறத்துப்பால் - முதலாவது அதிகாரம்

கடவுள் வாழ்த்து  - குறள் #1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம் :

உலகமொழிகள் அனைத்தும் "அ" என்னும் ஒலியையே முதல் ஒலியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளையே முதல்வனாகக் கொண்டுள்ளன.
என் வரிகள் :

அன்பின் முதல் எழுத்து

அன்னையின் முதல் எழுத்து
உயிரெழுத்துக்களின் முதல் எழுத்து

உலகமொழிகளின் முதல் எழுத்து

சிகரம் தொடும் சிறப்பெழுத்து

அகரத்தின் முதல் எழுத்து
"அ" என்ற சிறப்பெழுத்து
எழுச்சி பெற்ற எழுத்துக்களுக்கு

தலைவன் நீ எனில்
ஓர் அணு முதல்
ஏழறிவு கொண்ட உயிர் வரை
புவிவாழ் மானுடத்திற்கு

உயிர் தந்த உயர்வும் - நீயன்றோ
எம் இறைவா
மாக்களுக்கும்
மண் வாழ் மக்களுக்கும்


உயிர் கொண்ட ஆதி முதல்
சோதி இழக்கும் அந்தம்வரை
துணை செய் "கோ"வே

நீயன்றோ முதன்மை

ஆதி இறைவா
நீயன்றோ முழுமுதற் கடவுள் !


பதிவர் - பௌசியா இக்பால் 


குறளமுதம் 0001 - சிகரம் 


#திருக்குறள் #குறளமுதம் #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம்  

குறிச்சொற்கள்: #திருக்குறள் #குறளமுதம் #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account