சிகரம்

வேண்டாம்!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-12-07 18:03:38

மனம் நோகும் காதல் வேண்டாம்,

மங்கையின்பம் தேடவேண்டாம்,

பெண்ணென்ற போதை வேண்டாம்,

பெருங்குழியில் விழுந்திட வேண்டாம்!


பணம் தன்னை தேடவேண்டாம்,

பதவி தேடி ஓட வேண்டாம்!

பிறர் காலை வாரிட வேண்டாம்!
கோபம் கொண்ட நெஞ்சம் வேண்டாம்,

வஞ்சகத்தை சுமக்க வேண்டாம்,

பிறர் உயர்வில் பொறாமை வேண்டாம்!


அன்பு தன்னை மறக்க வேண்டாம்,

அனைத்து உயிர்க்கும் தொல்லை வேண்டாம்,

இயந்திரமாய் வாழ வேண்டாம்,

வாழ்க்கை தன்னை தொலைக்க வேண்டாம்!


-கவிஞர் கவின்மொழிவர்மன்

குறிச்சொற்கள்: #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #வேண்டாம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account