சிகரம்

தமிழின் அழகு!

பதிவர் : சதீஷ் விவேகா on 2017-11-28 23:42:24

உழவில் செழிக்கும் கழனியழகு

உழைப்பில் வரும் வியர்வையழகு


தாழ்ப்பாள் இல்லா வானழகு

வான் தரும் மழையழகு


மழலை முகத்தின் சிரிப்பழகு
காதலைச் சொல்லும் விழியழகு

விழி தரும் கவியழகு


கவி தொடுக்கும் மொழியழகு

மொழியில் சிறந்த தமிழ் அழகு

தமிழின் மகுடம் "ழ"கரம் அழகு!


- இப்பதிவு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்- 

குறிச்சொற்கள்: #ழ
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account