சிகரம்

இனியொருவன்...

பதிவர் : அதிசயா on 2017-11-26 18:46:10

 

 

மீண்டெழும் கடலே

முகிலற்ற வானே

முடிந்துவிடா வான்விளக்கே

எம் ஆலகண்டனுக்கு நன்றிகளை 

சேர்ப்பியுங்கள் இந்நாளிலும்.

எழுத்தறிவித்தாய்

எம் சுயம் இயற்றிட்டாய்

கொடிகொண்டு படைகாத்து 

பாடல்பெற்ற என் மண் 

அமைத்திட்டாய்

கரிகாலா 

அத்தனையும் துரோகமாகி

தூசுஎன போகையில் துயர் 

தாங்க என்செய்தாய்_இனி

யார் வந்து போனாலும் 

எதுசொல்லிப்போனாலும்

உள் ஆடும் ஒரு தீபம் நீயல்லோ_எமக்கு

உனை போல இனியொருவன் 

இல்லையெல்லோ...


இக்கவிதை அதிசயா (லக்ஷி நாகேஸ்வரன்) அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்ட படைப்பாகும்.


இனியொருவன் - அதிசயா - பேஸ்புக் பதிவு 


-அதிசயா 


இனியொருவன் - அதிசயா - சிகரம் 

 

குறிச்சொற்கள்: #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account