எங்கள் தமிழ்மொழி வாழியவே!

பதிவர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார் on 2017-11-24 12:12:29

வாழ்ந்தாலும் தமிழுக்கும் 

தமிழர்க்கும் வாழ்வேன்

வளைந்தாலும் நெளிந்தாலும் 

தமிழ்பொருட்டே ஆவேன்


தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் 

தமிழ்மேல்தான் வீழ்வேன்

தனியேனாய் நின்றேனும் 

என்கொள்கை மாறேன்


சூழ்ந்தாலும் தமிழ்சுற்றம் 

சூழ்ந்துரிமை கேட்பேன்

சூழ்ச்சியினால் எனது 

உடலை இருகூறாய்

போழ்ந்தாலும் சிதைத்தாலும் 

முடிவந்த முடிவே
எமை புதைத்தாலும் எரித்தாலும்

எம் அணுக்களெலாம் அதுவே


எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே

வானமளந்ததனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே


முன்னர் நிகழ்ந்ததனைத்தும் 

உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும்

இவள் என்றுபிறந்தனள் என்றறியாத

இயல்பினளாம் எங்கள் தாய்

 


கவி இயற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்; தொகுத்தளித்தவர் அகரம் பார்த்திபன்


எங்கள் தமிழ்மொழி வாழியவே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்குறிச்சொற்கள்: #TAMIL #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account