அம்மா என்றொரு அற்புதம் !

பதிவர் : பாலாஜி on 2017-11-22 15:21:12

அம்மா" என்றொரு

அற்புதக் களஞ்சியம் ! இன்று நான்

அலறி அழைத்தாலும் வாராத, மனதில்

ஆறாத காயமாய்

அருகி நின்றுவிட்ட நினைவுப் பெட்டகம் !

காலச் சுவடுகளாய் நிலைத்து

நின்றுவிட்ட அம்மா என்றவொரு

அற்புத நினைவு !

ஆறாத வடுவாக ஆனாலும்

மனதில்

அன்பாக வருடும்

அற்புத நினைவு ! இனிமைக்கு

இனிமை கூட்டும்

இதயத்தைத் தாலாட்டும்

இன்னிசை மழையாய் என்றைக்கும்

உள்நிலைக்கும் அம்மா என்றவொரு

அற்புத நினைவு !அம்மா என்றொரு அற்புதம் !

அம்மா என்றும்

அற்புதம் !கவிஞர் : கி.பாலாஜி - 08.05.2016 - இக்கவிதை பாலாஜி அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.குறிச்சொற்கள்: #கவிதை #பாலாஜி #தமிழ்கூறும்நல்லுலகம்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account