திருநங்கைகள்

பதிவர் : ம.சக்திவேல் on 2017-11-02 08:25:26

இலங்கை-யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட "1000 கவிஞர்கள் 1000 கவிதைகள்" என்ற பெருநூலில் எனது "திருநங்கைகள்" என்ற கவிதை வெளியாகியுள்ளது. எனது கவிதையை வெளியிட்ட யோ.புரட்சி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

திருநங்கைகள்


உரு மாறியதால் 
உறுப்பறுத்து வாழும் 
கடவுளின் பிள்ளைகள் !
வரதட்சணை 
வாங்கி வாழாத
வானம்பாடிகள் !



வனம் அழித்து 
மலை உடைத்து 
வயல் மறைத்து 
மனை பிரித்து வாழா 
மரகத கற்கள் !




அரசு சொத்துக்களை 
அபகரித்து வாழா
அன்னப்பறவைகள் !
கணிமவளங்களை
கொள்ளையடித்து வாழா 
கோமேதகங்கள்!
ஊர் கொளுத்தி 
காதல் பி(எ )ரிக்கா 
வேடந்தாங்கல்கள் !
குறுக்கு வழியில் 
வாழ்வு தேடிடா 
குடும்பவிளக்குகள் !



எல்லா துறைகளிலும் 
கோலோச்சி கொண்டிருக்கும் 
கோவில் கோபுரங்கள் !
எதிர்கால உலகை 
ஆளப்போகும் 
எட்டாவது 
உலக அதிசயங்கள்!

இக்கவிதை கவிஞர் ம.சக்திவேல் அவர்களின் படைப்பாகும். இக்கவிதை 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று ம.சக்திவேல் அவர்களால் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்: #POEM #சக்திவேல்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account