நிலாபாரதி கவிதைகள்

பதிவர் : நிலாபாரதி on 2017-10-31 20:27:21

01 
ஆறுதலுக்காகத்தான் தோள்சாய்கிறேன்! 
ஆதாயத்திற்கென நினைத்துக்கொள்கிறது
இந்த உலகம்!

02
பைத்தியமாவதைவிட,
பேரானந்தம் 
வேறென்ன இருந்துவிடப்போகிறது ?


03
நிராசையின்
கனவுகளை தின்று 
செரித்துவிடு மனமே!


04
ஒப்பனைகள் என்றறிந்தபின்னும் உதிர்க்கும் 
உன்வார்த்தைகளுக்கு நேசம் என்றுதான் 
பெயரிட்டுக்கொள்கிறேன் ...  
05
மன்னித்ததாய் சொல்லி 
மருந்திட்ட நீதான், 
மறக்காமல் 
ரணப்படுத்தியும் போனாய் மற(று)க்கமுடியா வார்த்தைகளால் ...!


06
வார்த்தைகளாலே உருவக்குத்தி,
ஒன்றும் செய்யாததுபோல் கடந்துபோகும் கத்திமனம் 
எப்படி வாய்த்திருக்கும் 
உனக்கு மட்டும்?


07
இப்படித்தான் என்று கணித்துவிட்டு
நீ கத்தித்தொலைக்கும்போதுதான், 
நானும் அப்படியே இருந்துவிடலாமென்று 

அசாத்திய வைராக்கியம் தோன்றிவிடுகிறது!   

இக்குறுங்கவிதைகள் கவிஞர் நிலாபாரதி புவனா அவர்களால் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட படைப்புகள் ஆகும். 

நிலாபாரதி கவிதைகள்  - நிலாபாரதி - #NILABHARATHI       
 


குறிச்சொற்கள்: #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account