பேறுகாலம் (18+)

பதிவர் : கோபால் கண்ணன் on 2017-10-28 17:46:29

"அடுத்தமுற படுக்க வரட்டும்
மொறத்துலயே அடிக்கிறேன்"
வலி தாளாது
வசை பாடினாள் வள்ளி
"மொத புள்ளைக்கும் இதையே தான் சொன்ன
மூடுடி வாய"
பிரசவம் பார்க்கும்
பெரியக்கா கிழவி சீண்டினாள்


"இது மூணும் போதும்"
திண்ணையிலிருந்து
முனகிக் கொண்டான் முத்தப்பன்
மூன்றுநாட்கள் கடந்த பின்பு
ஆம்படையான்
முக வாட்டம் கண்ட வள்ளி
"புண்ணு ஆறட்டும் பொறுத்துக்க மாமா"
"அது கெடக்குது; ஆயுசுக்கும் காத்திருப்பேன்"
வகிட்டிலொரு முத்தமிட்டான் முத்தப்பன்
அத்தனையையும் மாத்திடுச்சே
அறுத்தெடுக்கும் மருத்துவம்
*
(மீள்: 15/05/2016)

இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

பேறுகாலம் - கோபால் கண்ணன் 
 


குறிச்சொற்கள்: #POEM #கவிதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account