தீபாவளியின் தத்துவம் !

பதிவர் : பாலாஜி on 2017-10-18 22:51:15

அழுக்கு, ஆணவம்,
அன்பு, பண்பு ,
அமைதி, கலகம், நன்மை, தீமை
 
ஆகிய யாவும்
நமக்குள் பிறந்து நமக்குள்
அழியும்.
அனைத்தும் ஒன்றாய் உறைவது நம்முள்!உள்ளதை எடுத்து அல்லதை மறந்து,
அன்பை மட்டும் துணையாய் கொண்டு
அழகான வாழ்வை அனைவருக்கும் நாம்
அமைத்துத் தருவோம்
அமைதி காண்போம்!

பிறவி எடுத்ததன் பயனைப் பெறுவோம்.

சடங்கு சாத்திரம் பெயரள வில்தான்! 
அன்பு ஒன்றே
ஆழ்நிலை அறிவோம்! 

தீபாவளியின் அடிப்படைக் கதையே  
அடுத்தவர் நலமுற
விழையும் பண்பே! தனக்கு 
வந்த துன்பம் என்றும்
தன்னுடன் போக!
தன்னுடன் மறைக!

தன்னுடன் உள்ளோர்
தாம்மகிழ் வதி ல்தான்
தனதும் மகிழ்வென்
றுணரும் பண்பே
தீபா வளியின்
தத் துவம்
என்க!

இதுவே நரகனின் இனிய
விருப்பம்!
இதுவே அவன்தாய்
தானும் விழைந்தது!

இதுவே தீபா
வளியின் தத்துவம்!இனிமை பொங்க
இதைநாம்
விழைவோம்!

-கி.பாலாஜி-
18.10.2017
பகல் 1.30
தீபாவளி நாள்


குறிச்சொற்கள்: #கவிதை #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account