அடி காந்தக் கண்ணழகி!

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-10-11 00:45:40

அடி காந்தக் கண்ணழகி!
காம்பில்லா பூவழகி!
மாங்காய் கசக்குதடி
மாதுளையும் ருசிக்கலடி-நீ சாந்தாய்
குழைச்சி வச்ச சந்தன மேனியடி
அதை பார்த்தே பரிதவித்து பாவமாய்
நானுமடி!
 
அய்யய்யோ 

முகத்தை திருப்பிடடி 
முழுமதி கூசுதடி-நீ  
உதட்டை சுழிப்பதிலே 
உதிரமும் உறையுதடி!  
வீரன் மறந்துவிட்ட 
வில்லோ புருவமடி-அதில்  
கயலை சேர்த்துவச்சி 
அம்பாய் தொடுக்குறடி!
 

கண்களிலென்ன சிரிக்கறடிகரு 
வண்டு பறக்குதடி-உன் 
கன்னத்தின் கதுப்புகளில் 
கவிதையாய் கொட்டுதடி!  
நாசியிலே மூக்குத்தியும் 
முத்தாய் ஜொலிக்குதடி!
ஏங்குகின்ற ஏக்கத்திலே 
பித்தாய் அடிக்குறடி!

அய்யய்யோ

இதழ்களை சுழிக்கிறடி என்னை
இம்சைகள் செய்யுறடி!  
இப்படியே அருகில் வந்து
இனிப்பாய் ருசிக்கிறடி!
காதிரு குலைகளடி 
காற்றிலே ஆடுதடி!
காதொடு ரகசியங்கள் 
பரஸ்பரம் பேசுதடி!
மேனியின் வண்ணமடி 
சொல்லவே தெரியலடி!
காணியை அரைச்சிவச்சி
கலக்கிடவோ கூடுமாடி!

கார்மேகம் அருகிலடி-உன் 

காதுகளை உரசுதடி!
சிவன்முடியின் மேலிருந்து 
கருமழையாய் இறங்குதடி!
அய்யய்யோ நெற்றியில் திலகமடி
எனை குற்றுயிராய் கொல்லுதடி!
நெஞ்சத்து ஆசையெல்லாம் 

நெருப்பாய் தகிக்குதடி!

அங்கத்தின் அழகினிலே-மனம் 

அகிலாய் புகையுதடி-அது அசைந்திடும் 
அசைவினிலே அனலாய் கொதிக்குதடி!
கம்பனு மிங்கில்லடி-காளி தாசனும் நானில்லடி,
இளங்கோ இறந்தானடி சிலேடை 
காளமேகம் மறைந்தானடி,
கண்ணதாசனும் இல்லையேடி-வாலியும் 
வைரமுத்துவும் பார்க்கலையோடி!
அய்யய்யோ உனை பார்க்காமல் 

பிழைத்தாரடி-உன் விழிகளால் 
சல்லடையாய் துளைக்கிறடி 

வில்லடியாய் சீறுறடி!
கள்ளியுன் விழியினிலே 
கள்ளுண்ட போதையடி! எள்ளிநகை
யாடுறடி-எனை சில்லுசில்லாய் சிதைக்குறடி!
அம்பையின் மறுபிறப்போ ரம்பையின்

முழுவடிவோ-நான்
செம்பையாய் காயுறேன்டி நீ 
செம்மையாய் வாட்டுறடி! அய்யய்யோ
ஆடையில் மூடிக்கடி 
அங்கங்கள் அசத்துதடி-நான்
கொஞ்சமாய் 
வாழணும்டியென் நெஞ்சமாய் நீயிரடி!
என் வர்ணனையிங்கு கொஞ்சம்!

பிரம்மனவள் மலரலடி தஞ்சம்!
அங்கை யவள் மலர்களின் மஞ்சம்!
அழகதுவோ அகிலத்தை மிஞ்சும்!
மங்கைய ரெல்லாம் அழகினில்

கஞ்சம்! இந்த அழகியிடம் கடவுளும் கிஞ்சும்!
அடடடா என் வர்ணனை கொஞ்சம்!

அவளை வர்ணிக்க வார்த்தையோ பஞ்சம்!

-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -

குறிச்சொற்கள்: #கவிதை #POEM
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

gt2

2017-10-11 03:12:40

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -

Create AccountLog In Your Account