பிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU - SEASON 01

பதிவர் : சிகரம் on 2017-10-08 08:05:39

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியானது எண்டமோல் ஷைன் (Endamol Shine) சர்வதேச குழுமத்தின் மற்றுமோர் படைப்பாகும். ஜூலை 16,2017 முதல் செப்டெம்பர் 24,2017 வரை ஒளிபரப்பானது. 
இந்நிகழ்ச்சி ஸ்டார் மா (Star Maa) தொலைக்காட்சியில் கடந்த 70 நாட்களாக ஒளிபரப்பானது. ஸ்டார் மா தொலைக்காட்சியானது ஸ்டார் இந்தியா (Star India) இன் ஓர் அங்கமாகும். 

பிக்பாஸ் தெலுங்கு தமிழைப் போலவே முதல் பருவமாகும். இப்போட்டியில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.

மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிவ பாலாஜி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூபா ஐம்பது இலட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியாளர்கள் மொத்தமாக 12 கோடி மக்கள் வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ஹரி தேஜா, அர்ச்சனா மற்றும் நவ்தீப் ஆகியோரே ஏனைய இறுதிப்போட்டியாளர்களாவர்.
பல சண்டைகள், பல சிரிப்புகள் சில சர்ச்சைகள் என பல உணர்வுகளையும் கலந்து தந்த பிக்பாஸ் தெலுங்கு முதலாம் பருவம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இரண்டாம் பருவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம்!

#BiggBossTelugu #BiggBoss #OppoBiggBoss #StarMaaTv #EndamolShineGroup #BBTelugu


குறிச்சொற்கள்: #BiggBossTelugu #BiggBoss #OppoBiggBoss #StarMaaTv #EndamolShineGroup #BBTelugu
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account